headlines

img

கண்ணை விற்று பொன்னை வாங்குதல்! - நவகவி

எட்டு சதவீதம் (!) பத்து சதவீதம் (!) 
வளர்ச்சி... வளர்ச்சி....- ஆனா
வெத்து வயித்துல கத்துங் கொடலுல 
வரட்சி!.... வரட்சி....!

நிதி அமைச்சரு சொல்லும் ஜோசியம்
என்ன இருந்துமே என்ன புண்ணியம்?
சிங்கிள் டீயுடன் மூணு வேளையும்
சிங்கி யடிக்குது ராம ராஜ்ஜியம்
ராம ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம்!
(எட்டு)
பொருளா தாரப் புள்ளிவிவரம்
எடுத்து எடுத்து வீசறான். குழு: வீசறான்.
பங்கு மார்க்கெட்டு சென்செக்ஸ் சுன் னு
என்ன என்னமோ பேசறான். குழு: பேசறான் .
கரன்சி நோட்டில் காந்தி படத்த
யோக்கியன் போல காட்டுறான். குழு: காட்டுறான்.
கண்ண சந்தா கோட்சே குல்லா 
நமக்கு நல்லா மாட்டுறான். குழு: மாட்டுறான்.
(எட்டு)
பொணவீக்கத்த அறியும் நாங்க
பணவீக்கத்த அறிந்திடோம். குழு: அறிந்திடோம்.
பொறந்த புள்ளைய அரசு தொட்டிலில்
போடும் வறுமைய அறிகிறோம். குழு: அறிகிறோம்.
எக்கனாமிக்ச காமிக்சு போல
காட்டுறான் பாத்தும் அழுகிறோம்! குழு: அழுகிறோம்!
இந்தி யாவில் அமெரிக்காவ
மிக்சு பண்ணுறான் கலங்குறோம். குழு: கலங்குறோம்.
(எட்டு)
நாட்டு வளர்ச்சிய அளக்கணு மின்னா
வீட்டு வளர்ச்சிய அளக்கணும். குழு: அளக்கணும்
கோடீஸ் வரனின் சொகுசுத் தொந்தி
வளர்ச்சிய ஏன் அளக்கணும்?  குழு: அளக்கணும்?
புதுப்பொருளா தாரமாம் அட
இது பொருளா தாரமா?   குழு: தாரமா?
கண்ணை விற்று பொன்னைக் கேட்டு
வாங்குதல்தான் லாபமா?   குழு: லாபமா?
(எட்டு)

;